தனியார்துறை ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் தொழில் அமைச்சர் நிமல் சிறிபால.டி.சில்வா தலைமையில் ஆராய்வு!

Thursday, July 8th, 2021

நாட்டிலுள்ள தனியார்துறை ஊழியர்களின் ஆகக் குறைந்த சம்பளத் தொகையான 10,ஆயிரம் ரூபாவை 12 ஆயிரத்து 500 ரூபாவாகவும், ஆகக் குறைந்த நாள் சம்பளத் தொகையான 400 ரூபாவை 500 ரூபாவாக அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

தனியார்துறை ஊழியர்களுக்கான ஆகக்குறைந்த சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள சட்டமூலம் தொழில் அமைச்சர் நிமல் சிறிபால.டி.சில்வா தலைமையில் நடைபெற்ற தொழிலமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

தற்பொழுது காணப்படும் ஆகக் குறைந்த சம்பளத் தொகையான 10,ஆயிரம் ரூபாவை 12 ஆயிரத்து 500 ரூபாவாகவும், ஆகக் குறைந்த நாள் சம்பளத் தொகையான 400 ரூபாவை 500 ரூபாவாக அதிகரிப்பதற்கும், 2016 ஆம் ஆண்டு 03 ஆம் இலக்க வேலையாளட்களின் குறைந்தபட்ச வேதனச்சட்டத்தின் 03 ஆவது சரத்தை திருத்துவதாக இது அமையும்.

அதேநேரம் இந்தச் சட்டமூலம் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் ஊடாக விதிக்கப்பட்ட எந்தவொரு தடைக்கோ அல்லது கட்டுப்பாடுகளுக்கோ உட்படாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் அரசியலமைப்புக்கு உட்பட்டது என்று சட்டமா அதிபர் சட்டரீதியான சான்றிதழ் வழங்கியிருப்பதாகவும், இதற்கமைய இச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தின் அனுமதிக்காக சமர்ப்பிப்பது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: