தனிமைப்படுத்தல் நிலையங்களிலும் வாக்களிப்பு நிலையங்கள் – தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு!

Wednesday, June 10th, 2020

நாடாளுமன்றத் தேர்தலின்போது தேவை ஏற்படும்போது தனிமைப்படுத்தல் நிலையங்களிலும், வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளிலிருந்து திரும்புவோர், இராணுவத்தினரால் நடத்தப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் 14 நாள்கள் தங்க வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அடுத்து வரும் வாரங்களில் பெருமளவு இலங்கையர்கள் நாடு திரும்புவதற்காக காத்திருக்கின்றனர்.

தேர்தல் நடைபெறும் போது, தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்க வைக்கப்பட்டிருப் போருக்காக அங்கு வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தலுக்கான சுகாதார வழிகாட்டல் நெறிமுறைகளில், தனிமைப்படுத்தல் மையங்களில் தேர்தலை நடத்துவதற்கான நடைமுறைகள் குறித்தும் விவரிக்கப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தல் நிலையங்களில் அமைக்கப்படும் வாக்களிப்பு நிலையங்களில், பணியாற்றும் அனைத்து அதிகாரிகளும், உடலை முழுமையாக மறைக்கும் வகையிலான பாதுகாப்பு அங்கி அணியவேண்டும் என்று அந்த வழிகாட்டு நெறியில் பரிந்துரைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: