தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கு மதிப்பளிக்காதவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை!

Thursday, May 6th, 2021

தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கு மதிப்பளிக்காதவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –

மக்கள் இந்தச் சந்தர்ப்பத்தில் பொறுப்புடன் செயற்படுவது அவசியமாகும். சுகாதாரத் துறையினரும் பாதுகாப்புப் பிரிவினரும் மாத்திரம் நோய்பரவலைக் கட்டுப்படுத்த முடியாது.

மக்களின் உயர்ந்தபட்ச ஒத்துழைப்பின் மூலமே கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: