தண்டவாளத்தில் நடந்தால் அபராதம்.!

புகையிரத பாதைகளில் நடந்து செல்பவர்களை கைது செய்யும் நடவடிக்கையை நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
புகையிரத பாதைகளில் நடந்து செல்பவர்களினால் ஏற்படும் உயிராபத்து கடந்த காலங்களில் அதிரித்து வருகின்றன.
இதேவேளை, புகையிரத பயணங்களின்போது அதற்கான பயணச்சீட்டு இன்றி பயணிப்போருக்கு நாளை முதல் 3000 ரூபா அபராதம் விதிக்க தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
தற்போது, 1500 ரூபாவாக காணப்படும் அபராதத் தொகையை 3000 ரூபாவாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. நாள் தோறும் பயணச்சீட்டு இன்றி புகையிரதங்களில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து செல்வதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
Related posts:
மகத்துவமான தொழில் ஆசிரியர் தொழில் - கல்வி அமைச்சர்!
வழமைக்கு திரும்பும் பாடசாலைகள் - பெற்றோர்கள் மாணவர்களைப் பாதுகாப்பாக அனுப்ப வேண்டும் என சுகாதார தரப்...
புதிய ஆண்டில் இலங்கை விரிவடையும் பொருளாதாரத்திற்குள் நுழையும் - மக்கள் தேவையற்ற வரிச்சுமையை கண்டு பய...
|
|