தடை விதிக்கப்பட்டுள்ள பகுதிகள் வாக்குச் சீட்டுக்களை விநியோகிப்பது இடைநிறுத்தம் – தபால் திணைகளம் அறிவிப்பு !

சுற்றுலா தடை விதிக்கப்பட்டுள்ள பகுதிகள் மற்றும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள வீடுகளுக்கு உத்தியோகப்பூர்வ வாக்குச் சீட்டுக்களை விநியோகிக்கும் நடவடிக்கையை தற்காலிகமாக இடைநிறுத்த தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
அத்துடன் சுகாதார அமைச்சின் மீள் அறிவித்தல் கிடைக்கும் வரை வாக்குச் சீட்டுக்களை விநியோகிக்காமல் இருக்க தீர்மானித்துள்ளதாகவும் தபால்மா அதிபர் தெரிவித்துள்ளார்.
உத்தியோகப்பூர்வ வாக்குச் சீட்டுக்களை விநியோகிக்கும் பணிகள் நேற்று (13) ஆரம்பமான நிலையில், சுற்றுலா தடைக்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள வீடுகளுக்கு வாக்குச் சீட்டுக்களை விநியோகம் செய்யவில்லை என அவர் தெரிவித்துள்ளார்
இந்த பகுதிகளுக்கான வாக்குச் சீட்டுக்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் எதிர்வரும் நாட்களில் இடம்பெறும் எனவும் அவர் கூறினார். இந்த முறை 2,000 த்திற்கும் அதிகமான அஞ்சல் அலுவலகங்களில் இந்த பணிகள் முன்னெடுக்கப்படுவதுடன் அதற்காக 8,000 தபால் ஊழியர்கள் கடமைகளில் ஈடுப்பட்டுள்ளனர்.
கடந்த 11 ஆம் 12 ஆம் திகதிகளில் தெரிவத்தாட்சி அதிகாரிகளால் தபால் திணைக்களத்திடம் உத்தியோகப்பூர்வ வாக்குச் சீட்டுக்கள் கையளிக்கப்பட்டன. உத்தியோகப்பூர்வ வாக்குச் சீட்டுக்களை விநியோகிக்கும் பணிகள் எதிர்வரும் 29 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளன.
எனினும் 19 ஆம் மற்றும் 26 ஆம் திகதிகளில் விசேட நாட்களாக கருதி உத்தியோகப்பூர்வ வாக்குச் சீட்டுக்கள் விநியோகிக்கப்படும் என தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன மேலும் கூறினார்
Related posts:
|
|