தடையினை நீக்குமாறு ரஷ்யாவிடம் ஜனாதிபதி கோரிக்கை!

இலங்கையின் தேயிலை மற்றும் விவசாயப் பொருட்களுக்கு ரஷ்யாவினால் விதிக்கப்பட்ட தடையை நீக்குமாறு, அந்நாட்டுப் ஜனாதிபதியிடம் கோரவுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஹப்புத்தலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார். இலங்கையில் இருந்து ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலைகளில், ஒரு வகை பூச்சியினம் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இலங்கையின் தேயிலை உள்ளிட்ட விவசாயப் பொருட்களுக்கு ரஷ்யாவினால் தடை விதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது
Related posts:
கருத்தடை விவகாரம்: முறைப்பாடு செய்யும் தாய்மார்களுக்கு விசேட மருத்துவ சோதனை!
வடக்கு - கிழக்கில் குடும்ப நல உத்தியோகத்தர்களுக்கான ஆட்சேர்ப்பு விண்ணப்பங்கள் கோரல்!
இந்தியப் பிரதமருடனான சந்திப்பு வெற்றிகரமாக அமைந்தது - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ!
|
|