தகவல்களை மறைக்க வேண்டிய எந்தவித அவசியமும் இல்லை – சுகாதார அமைச்சு!

Sunday, July 4th, 2021

கொரோனா தொற்றுறுதியானவர்கள் தொடர்பிலான தகவல்களை மறைக்க வேண்டிய எந்தவித அவசியமும் இல்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சின் பிரதி  சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார்.

டெல்டா திரிபுடனான தொற்றுறுதியானவர்கள் இனங்காணப்பட்ட இடங்களை அடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகள் தற்போது இடம்பெறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த இடங்கள் தொடர்பில் மாற்று நடவடிக்கை எடுக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: