டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி மேலும் அதிகரிப்பு!

Thursday, May 25th, 2023

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இன்று காலை வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் கொள்விலை 297.23 ரூபாயாகவும் விற்பனை விலை 311.23 ரூபாயாகவும் குறைந்துள்ளது.

மத்திய வங்கியினால் கடந்த பெப்ரவரி 24 ஆம் திகதி அறிவிக்கப்பட்ட நாணய மாற்று விகிதங்களின்படி டொலரின் பெறுமதி 362.66 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: