டெங்கு நோயினால் 52 பேர் உயிரிழப்பு!

Tuesday, December 25th, 2018

நடப்பாண்டின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோய் காரணமாக 52 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் டெங்கு நோயினால் இந்த வருடம் மொத்தமாக 48 ஆயிரத்து 303 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதிகூடிய டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதுடன், அடுத்தபடியாக கம்பஹாவிலும், மட்டக்களப்பிலும் பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: