டெங்கு ஒழிப்பு வாரம்: முதல் நாள் 573 பேருக்கு எதிராக வழக்கு!
Friday, March 31st, 2017டெங்கு ஒழிப்பு வாரம் அமுலாகிய முதல் நாளான நேற்றைய தினம் 83 ஆயிரம் இடங்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி செயலணியும், சுகாதார அமைச்சும் இணைந்து நடத்தும் இந்த பரிசோதனை நடவடிக்கையின்போது 537 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மூவாயிரம் குழுக்கள் இந்த பரிசோதனை நடவடிக்கையில் இணைந்துள்ளன.பாடசாலை வளாகங்களிலும், மதவழிபாட்டு தலங்களிலும் டெங்கு நுளம்புகள் உருவாகும் அபாயம் அதிகளவில் காணப்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.
அபாய வலையங்களாக கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கேகாலை, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, அம்பாறை, திருகோணமலை, யாழ்ப்பாணம், இரத்தினபுரி ஆகிய மாவட்டங்கள் இனம் காணப்பட்டுள்ளன.
Related posts:
சபாநாயகருக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்!
மரண தண்டனை அமுலுக்கு அமைச்சரவை ஒப்புதல் - அமைச்சர் அர்ஜுண ரணதுங்க!
கடன் மறுசீரமைப்பு செயன்முறையை செப்டம்பர் அல்லது ஒக்டோபர் மாதத்திற்குள் நிறைவுபெறும் - சர்வதேச நாணய ந...
|
|