கடன் மறுசீரமைப்பு செயன்முறையை செப்டம்பர் அல்லது ஒக்டோபர் மாதத்திற்குள் நிறைவுபெறும் – சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்ப்பு!

Tuesday, May 16th, 2023

இலங்கை தனது கடன் மறுசீரமைப்பு செயன்முறையை செப்டம்பர் அல்லது ஒக்டோபர் மாதத்திற்குள் நிறைவு செய்யும் என சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்த்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் முதலாவது மீளாய்வு கூட்டத்திற்கு முன்னதாக இந்த செயன்முறை முடிவடையும் என எதிர்பார்ப்பதாக அதன் ஆசிய மற்றும் பசுபிக் துறையின் பணிப்பாளர் கிருஷ்ணா சீனிவாச தெரிவித்துள்ளார்.

தற்போது ஆலோசனைப் பயணமாக இலங்கை வந்துள்ள கிருஷ்ணா சீனிவாசன், இலங்கை தனியார் மற்றும் இருதரப்பு கடன் வழங்குநர்களுடன் நல்லெண்ணத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார்.

இதன்போது கடன் மறுசீரமைப்பு செயல்பாட்டில் சர்வதேச நாணய நிதியம் தலையிடாது என்றும் எந்தவொரு உள்நாட்டு கடன் மறுசீரமைப்பிலும் நிதி ஸ்திரத்தன்மை உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் பாதிக்கப்படக்கூடிய குழுக்களின் மீதான நெருக்கடியின் தாக்கம் மற்றும் வெளிநாட்டு நிதியுதவியை அணுகுவதில் ஏற்படும் தாமதத்தால் ஏற்படும் பொருளாதார செலவுகள் குறித்து தாம் ஆழ்ந்த கவலை அடைந்துள்ளதாகவும் கிருஷ்ணா சீனிவாசன் கூறியுள்ளார்.

இதேநேரம் அங்கு உரையாற்றிய சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி சர்வாட் ஜஹான்,அரச நிறுவனங்கள் இலாபம் ஈட்டாமல் அரசின் செலவினங்களை அதிகமாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது

Related posts: