டெங்கு ஒழிப்பு உடன்படிக்கையில் இலங்கை!
Tuesday, April 26th, 2016டெங்கு நோய் ஒழிப்பிற்கான புதிய ஊசி மருந்து தொடர்பில் நடைபெறும் பரிசோதனை நடவடிக்கைகளுக்கு இலங்கையும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நிறுவனங்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற இந்த பரிசோதனை நடவடிக்கைக்காக 10 நாடுகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் தென் ஆசிய நாடுகளுள் தெரிவு செய்யப்பட்ட ஒரே நாடு இலங்கை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பரிசோதனை நடவடிக்கைக்காக இலங்கை கையொப்பம் இட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் கொழும்பு மாவட்டத்தை மையப்படுத்தி 6000 சிறுவர்களுக்கு குறித்த ஊசி மருந்து பரிசோதனை செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் உலக சுகாதார அமைப்பின் அனுமதி கிடைத்தவுடன்,குறித்த ஊசி மருந்தானது தேசிய நோய் எதிர்ப்பு திட்டத்திற்குள் உள்வாங்கப்படும் என சுகாதார அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.
Related posts:
அமெரிக்க டொலரின் பெறுமதி 160 ரூபாவாக அதிகரிக்கும்!
எதிர்வரும் வியாழக்கிழமைமுதல் புகையிரத சேவைகள் ஆரம்பம் - புகையிரதத் திணைக்களம் அறிவிப்பு!
121 பொலிஸ் நிலையங்களின் வாடகை மற்றும் பராமரிப்பு செலவு 11 கோடி - பொலிஸ் முகாமைத்துவப் பிரிவு தகவல்!
|
|