டெங்கினால் இவ்வருடம் பேரழிவு: அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!

Monday, May 15th, 2017

 

இவ் வருடம் டெங்கு நோயா­ளரின் எண்­ணிக்கை ஒரு இலட்­சத்­தையும் கடந்து  இலங்கை மிகமோசமான பேர­ழி­வுக்கு முகம் கொடுக்கும் என அரச வைத்­திய அதி­கா­ரிகள் சங்கம் எச்­ச­ரிக்கை விடுத்­துள்ளது. வரு­டத்தின் முதல் நான்கு மாதக் காலப்­ப­கு­திக்குள் நாடு முழு­வதும் 43915 டெங்கு நோயா­ளிகள் இனங்­கா­ணப்­பட்­டுள்­ளனர். இதில் 41.4 சத­வீ­த­மான நோயா­ளிகள் மேல் மாகா­ணத்தில் இனங்­கா­ணப்­பட்­டுள்­ள­தாக சுட்­டிக்­காட்டும் அரச வைத்­தியர் சங்கம் மேல்­மா­கா­ணத்தில் இது வரை 35 டெங்கு மர­ணங்கள் இடம்­பெற்­றுள்­ள­தா­கவும் தெரி­விக்­கின்­றது.

குரு­நாகல்  வைத்­தி­ய­சாலை வார்­டுகள் டெங்கு நோயா­ளி­க­ளினால் நிரம்­பி­யுள்­ள­தா­கவும் நோயாளிகளைக் காப்­பாற்­று­வ­தற்­காக அங்கு கட­மை­யாற்றும் டாக்­டர்கள் அர்ப்­ப­ணிப்­புடன் பேராடி வருவதா­கவும்  வைத்­திய அதி­கா­ரிகள் சங்கம் தெரி­விக்­கின்­றது. இது­வரை டெங்கு நோயா­ளர்கள் அறிவிக்­கப்­ப­டாத திரு­கோ­ண­மலை, மட்­டக்­க­ளப்பு, யாழ்ப்­பாணம், அம்­பாந்­தோட்டை, கல்­முனை ஆகிய பிரதேசங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அச் சங்கம் தெரிவித்துள்ளது.


அனைவரையும் ஒன்றிணைப்பதனூடாகவே நாட்டை முன்னேற்ற முடியும்என பிரதமர் தெரிவிப்பு!
பரீட்சை மோசடிகளைத் தடுக்க கடும் நடவடிக்கை !
தொடருந்து பயணக் கட்டணம் அதிகரிப்பு!
"யாழ் நகரை  பசுமை  ஆக்குவோம்"  வேலைத்திட்ட  நாளை ஆரம்பம் - வடக்கு மாகாண ஆளுநர் அலுவலுகம் த...
தேசிய கல்வியற் கல்லூரி டிப்ளோமா பட்டம் பெற்ற 4,286 பேருக்கு ஆசிரியர் நியமனம்!