டீசல் விலை குறைந்தாலும் பேருந்து கட்டணத்தை குறைக்க முடியாது – தேசிய போக்குவரத்து ஆணையம் தெரிவிப்பு!

Tuesday, October 18th, 2022

ஓட்டோ டீசல் 15 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள போதும் பேருந்து கட்டண திருத்தத்தை கருத்தில் கொள்ள இந்த விலை குறைப்பு போதுமானதாக இல்லை என்று தேசிய போக்குவரத்து ஆணையம் (NTC) தெரிவித்துள்ளது.

NTC பணிப்பாளர் நாயகம் நிலான் மிரண்டா இதுகுறித்து மேலும் கருத்து தெரிவிக்கையில் –

பேருந்து கட்டண திருத்தம் மேட்கொள்ளப்பட வேண்டுமாயின் ஒரு லீற்றர் டீசலின் விலை 4% அல்லது அதற்கும் அதிகமாக குறைக்கப்பட வேண்டும். இருப்பினும், தற்போதைய டீசல் விலைக்கு இணையாக பேருந்து கட்டணத்தை மாற்றுவதற்கான கணக்கீடு நடந்து வருகிறது.

இதேவேளை, தற்போதைய டீசல் விலை குறைப்பு பஸ் கட்டண மீளாய்வுக்கு உதவாது என மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பஸ் சங்கத்தின் (IPPBA) தலைவர் சரத் விஜித குமார தெரிவித்துள்ளார்.

டீசல் விலை குறைந்தாலும் மசகு எண்ணெய், டயர், டியூப், பேட்டரி, வாகன சேவை கட்டணம், உதிரி பாகங்களின் விலை குறையவில்லை. தற்போதுள்ள பேருந்துக் கட்டணத்தை மேலும் குறைக்கும் பட்சத்தில் எங்களால் சேவையை தொடர முடியாது என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கியமை கடந்த அரசாங்கத்தின் பாரிய தவறு - ஜனாதிபதி!
காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு நீதியமைச்சர் விஜயதாச பணிப்புரை!
தேர்தலை இலக்காக கொண்டே அரசாங்கம் அவரச அபிவிருத்திகளை மேற்கொண்டு வருகின்றது - மஹிந்த தேசப்பிரிய குற...