டிஜிற்றல் கல்விமுறை இலங்கையில் மேம்படும் – உதவி வழங்குகிறது சுவிற்சர்லாந்து!

Thursday, January 19th, 2017

இலங்கையில் டிஜிற்றல் கல்வி முறைமையை மேம்படுத்துவதற்கான ஆதரவையும், அது தொடர்பிலான ஆலோசனைகளையும் வழங்க தயாராக இருப்பதாக சுவிற்சலாந்து மைக்ரோசொப்ட் கிளையின் தலைவர் பிலிப்பேன் கார்ட்டோஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்கவுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். டிஜிற்றல் முறைமையை வளர்த்தெடுப்பதற்கான முறையான தலைவர்கள் இலங்கையில் உருவாக வேண்டும்.

எதிர்காலத்தில் காகித கோப்புகள் இல்லாமல் அனைத்துத் துறைகளிலும் கணினியின் பயன்பாடே மேலோங்க வேண்டும் வேகமாக கல்வியறிவை இலங்கையில் ஏற்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

swiss-flag

Related posts: