யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

Thursday, May 16th, 2024

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் இன்று வியாழக்கிழமை (16) கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் ஒன்றுகூடிய பல்கலைக்கழக ஊழியர்கள் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம் திருநெல்வேலி சந்திவரை பேரணியாக சென்று பல்கலைக்கழகத்தை மீண்டும் அடைந்தது.

நாடு முழுவதிலுமுள்ள அரச பல்கலைக்கழகங்களில் நடைபெற்றுவரும் தொடர்ச்சியான வேலைநிறுத்தத்தின் ஒரு பகுதியாக அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும், கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க சம்மேளனம், “பல்கலைக்கழக கல்விசாராப் பணியாளர்களின் சம்பள முரண்பாடு, சம்பள அதிகரிப்பு மற்றும் அவர்களைப் பாதிக்கும் பிரச்சினைகளில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் அரசாங்கமும் தொடர்ந்து ஏமாற்றி வருகின்றமைக்கு” எதிர்ப்புத் தெரிவித்தே போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

வறுமையுடன் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே எனது நோக்கம் – மன்னார் மாவட்டத்தின் புதிய அ...
எமது முற்றத்தில் வந்து தொழிலை மேற்கொண்டுவிட்டு தவறுகளை மறைக்க எம்மையும் கடற்படையினரையும் குற்றம் சும...
சிறுபோக செய்கையின் போது மோசடியில் ஈடுபட்ட அமைப்புக்களில் முறைகேடுகளுக்கு காரணமானவர்கள் நிர்வாக பதவி...