ஞாயிற்றுக்கிழமைகளில் மேலதிக வகுப்புக்களை நடத்துவதற்கு தடை…?

Sunday, December 30th, 2018

ஞாயிற்றுக்கிழமைகளின் முற்பகல் வேளைகளில் தனியார் மேலதிக வகுப்புக்களை நடத்துவதற்கு தடைவிதிக்கும் வகையில், அமைச்சரவை பத்திரம் ஒன்றை தாக்கல் செய்யவுள்ளதாக, புத்தசாசன மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார்.

மொனராகலையில் உள்ள தேசிய பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் வைத்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அனைத்து சமயத் தலைவர்களுடனும் கலந்துரையாடி, அறநெறி பாடசாலைகளை கட்டாயமாக்கும், வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, ஞாயிற்றுக்கிழமை நாட்களில் பிற்பகல் 2 மணிவரையும், பௌர்ணமி விடுமுறை தினத்தன்று முழுமையாகவும் தனியார் மேலதிக வகுப்புக்களை நடத்துவதற்கு தடை விதிக்கும் வகையில் அமைச்சரவை பத்திரம் ஒன்றை தாக்கல் செய்ய உள்ளதாக அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார்.

Related posts: