ஜெனீவா மாநாட்டிற்கு ஜனாதிபதி பிரதிநிதியாக வடமாகாண ஆளுநர் உள்ளிட்ட மூவர்!

Wednesday, March 6th, 2019

ஜெனீவாவில் இடம்பெறும் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் கூட்டத்தொடரில் ஜனாதிபதியின் விசேட பிரதிநிதிகளாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் அமுனுகம, மகிந்த சமரசிங்க மற்றும் வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதன்போது , பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதற்கு இலங்கைக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என ஐ.நா. மனித உரிமை ஆணையத்திடம் இவர்கள் கோர எதிர்பார்த்துள்ளனர்.

இதேவேளை யார் எதிர்த்தாலும் போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு எதிரான மரண தண்டனை செயற்படுத்தப்படும் என ஜனாதிபதி மீண்டும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: