ஜுன் முதல் வாரத்தில் அனைத்து பாடசாலைகளையும் திறக்க தீர்மானம் என்ற செய்தியில் எதுவித உண்மையும் கிடையாது – கல்வி அமைச்சு அறிவிப்பு

Tuesday, May 5th, 2020

எதிர்வரும் ஜூன் மாதம் பாடசாலைகளை திறப்பதற்கு கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் எதிர்வரும் மே 11 ஆம் திகதி அரச நிறுவனங்களின் பணிகள் ஆரம்பிப்பதுடன் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஏனைய ஊழியர்கள் பணிக்கு சமூகமளிக்க வேண்டுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது என வெளியான செய்திகளில் உண்மை இல்லை என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இது குறித்து கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் – ஜூன் மாதம் முதலாம் திகதிமுதல் பாடசாலைகளை திறப்பதற்கு கல்வியமைச்சு எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் சில அச்சு ஊடகங்கள் மற்றும்  வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்திகளில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை என குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: