ஜீப் வண்டியில் பிறந்த ஆண் குழந்தை – வட்டுக்கோட்டையில் சம்பவம்!

பிரசவ வலியால் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு பொலிஸாரின் ஜீப் வண்டியில் ஆண் குழந்தை பிறந்த சம்பவம் வட்டுக்கோட்டையில் இடம்பெற்றுள்ளது.
நேற்று காலை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது –
வட்டுக்கோட்டையைச் சேர்ந்த கர்ப்பிணிப்பெண் ஒருவருக்கு பிரசவவலி ஏற்பட்டுள்ளது இதையடுத்து முச்சக்கரவண்டியில் அவர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.
இருந்தம் குறித்த முச்சக்கரவண்டி பழுதடைந்துள்ளது.இவ்வேளையில் அப்பகுதியில் வந்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன் குணதிலக, சம்பவத்தை அறிந்துகொண்டதுடன், தனது பொலிஸ் ஜீப் வண்டியில் குறித்த பெண்ணையும், அவரது கணவரையும் வைத்தியசாலைக்கு அனுப்பியுள்ளார்.
எனினும் குறித்த ஜிப் வண்டி வைத்தியசாலையை சென்அடைவதற்கு முன்னரே கறித்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு பொலிஸ் ஜீப் வண்டியில் அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. பொலிஸாரின் மனிதாபிமானம் மிக்க செயலால் குழந்தையும் தாயும் நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது..
Related posts:
|
|