ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க – பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலாடா சில்வா இடையே முக்கிய சந்திப்பு – இரு நாடுகளையும் பாதிக்ககூடிய விடயங்களுக்குத் தீர்வு காண ஒன்றுபடுவது தொடர்பில் ஆராய்வு!

Sunday, December 3rd, 2023

துபாயில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் காலநிலை மாநாடான COP28 க்கு இடையே, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலாடா சில்வா ஆகியோருக்கு இடையிலான முக்கிய சந்திப்பு நேற்று (02) நடைபெற்றது.

இச் சந்திப்பின் போது ஜனாதிபதி விக்ரமசிங்க, வெப்ப வலய நாடுகளான இலங்கை மற்றும் பிரேசில் ஆகிய இரு நாடுகளையும் பாதிக்ககூடிய விடயங்களுக்குத் தீர்வு காண ஒன்றுபடுமாறும் கேட்டுக்கொண்டார்.

அத்தோடு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலாடா சில்வாவை இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

ஐக்கிய இராச்சியத்தில் கடந்த வியாழக்கிழமை (30) ஆரம்பமாகிய ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாட்டில் (Cop28) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலையிலான உயர்மட்ட இலங்கை குழு கலந்துகொண்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, சுற்றாடல் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, சுற்றாடல் அமைச்சின் செயலாளர் கலாநிதி அனில் ஜாசிங்க, காலநிலை மாற்றத்திற்கான ஜனாதிபதி ஆலோசகர் ருவான் விஜேவர்தன ஆகியோர் இலங்கையின் உத்தியோகபூர்வ பிரதிநிதிகள் குழுவை ஜனாதிபதி தலைமையில் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். மற்றும் ஜனாதிபதியின் வெளிவிவகார பணிப்பாளர் தினுக் கொலம்பகே உட்பட மேலும் சில முக்கிய பிரதிநிதிகளும் இந்த மாநாட்டில் கலந்துகொண்டுள்ளனமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: