ஜனாதிபதி தலைமையில் இராஜகிரிய மேம்பாலம் திறப்பு!

Monday, January 8th, 2018

இராஜகிரிய சந்தியில் நிர்மாணிக்கப்பட்ட மேம்பாலம் மக்களின் பாவனைக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த மேம்பாலம் நான்கு வழிப்பாதைகளைக் கொண்டதும் அதன் நீளம் 533 மீற்றர்களாகும். இதற்கு 471 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டில் ஸ்பெயின் நாட்டு நிறுவனமும் உள்நாட்டு நிறுவனமும் இணைந்து நிர்மாணப்பணிகளை ஆரம்பித்தன.

இராஜகிரிய பிரதேசத்தில் நீண்ட காலமாக பொதுமக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் வாகன நெருக்கடிக்கு தீர்வுகாணும் வகையில் இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: