ஜனாதிபதி கோட்டாபயவுக்கு சீன ஜனாதிபதி உறுதிமொழி – கொரோனா தடுப்பூசிகளுடன் இலங்கை வருகிறது விசேட விமானம்!

Thursday, May 20th, 2021

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு சீன ஜனாதிபதி கொடுத்த உறுதிமொழியினை அடுத்து கொரோனா தடுப்பூசிகள் நன்கொடையாக இலங்கைக்கு வரவுள்ளன.

இதுதொடர்பில் சீன தூதரகம் வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில்,

சீன ஜனாதிபதி இலங்கை ஜனாதிபதிக்கு வழங்கிய உறுதிமொழியில் அடிப்படையிலேயே 5 இலட்சம் சினோபார்ம் கொவிட் தடுப்பூசிகள் நன்கொடையாக வழங்கப்படவுள்ளது.

எதிர்வரும் செவ்வாய்கிழமை குறித்த 5 இலட்சம் சினோபார்ம் கொவிட் தடுப்பூசிகள் விசேட விமானத்தின் மூலமாக இலங்கைக்கு வந்தடையும் எனவும் கொழும்பில் உள்ள சீன தூதரகம் அறிவித்துள்ளது.

அது மாத்திரமல்லாமல் மேலும் 30 இலட்சம் சினோபார்ம் கொவிட் தடுப்பூசிகளை விலைக்கு கொள்வனவு செய்ய இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளதாகவும் எதிர்வரும் ஜூன் மாத இறுதியில் அந்த தடுப்பூசிகள் நாட்டை வந்தடையும் எனவும் ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: