ஜனாதிபதி இந்தியா மற்றும் தாய்லாந்து நாடுகளுக்கு விஜயம்!

Monday, October 3rd, 2016

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு இம்மாதம் விஜயம் செய்யவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

விசேட பொருளாதார மாநாடு ஒன்றில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி எதிர்வரும் 14ம் திகதி இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.இந்தியாவின் கோவாவில் எதிர்வரும் 16, 17 மற்றும் 18ம் திகதிகளில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.

இந்த விசேட பொருளாதார மாநாட்டில் ஆசிய பிராந்திய வலய நாடுகள் பல பங்கேற்கவுள்ளன. ஆசிய பிராந்திய வலய நாடுகளுக்கு இடையில் கூட்டுறவினை ஏற்படுத்தல் மற்றும் இலங்கைக்கு வர்த்தக நலன்களை பெற்றுக் கொடுத்தல் ஆகிய நோக்கில் ஜனாதிபதி இந்த விஜயத்தில் இணைந்து கொள்கின்றார்.

இதேவேளை, ஜனாதிபதி மைத்திரி எதிர்வரும் 8ம் மற்றும் 9ம் திகதிகளில் தாய்லாந்திற்கு விஜயம் செய்யவுள்ளார். பிராந்திய பொருளாதார மாநாடு ஒன்றில் பங்கேற்பதற்காக அவர் இவ்வாறு தாய்லாந்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.

mythiribala-6666s4

Related posts:


உயர் தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் நடத்துவதில் தாமதம் ஏற்படும் சூழ்நிலை - கல்வி அமைச்சு தெரிவ...
உலக ஊடகவியலாளர்கள் மாநாடு சியோல் நகரில் ஆரம்பம் - இலங்கை உட்பட 25 நாடுகளை சேர்ந்த 35 பேச்சாளர்கள் சி...
சர்ச்சைக்குரிய கருத்து - இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் நோயல் பிரியந்த பதவியில் இருந்து இராஜினாமா!