ஜனாதிபதி ஆலோசனை – எதிர்வரும் முதலாம் திகதியுடன் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தளர்வு – இராணுவத் தளபதி அறிவிப்பு!

Wednesday, September 29th, 2021

நாட்டில் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் முதலாம் திகதி அதிகாலை 4 மணி முதல் நீக்கப்படவுள்ளதாக  இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், புதிய சுகாதார வழிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் –

ஊரடங்கு தளர்த்தப்பட்டதும் சுமார் 50 அலுவலக ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே உப பிரிவின் தலைமைப் பொறியியலாளர் கே.ஜி.எஸ்.பண்டார தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் ஊரடங்குக் காலத்தில் சேவையில் ஈடுபடாதிருந்த ரயில்களின் தொழில்நுட்பக் கோளாறுகள், மின் கோளாறுகள், புதிய ஆசனங்களை நிறுவுதல், தீந்தை பூசுதல் மற்றும் கிருமித் தொற்று நீக்கம் என்பவற்றை மேற்கொள்ள முடிந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது 91 ரயில்களை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.  அதன்படி, பிரதான பாதையில் 33 சேவைகளும், சிலாபம் வழித்தடத்தில் 14 சேவைகளும், வடக்குப் பாதையில் இரண்டு சேவைகளும், களனிவெளி வழித்தடத்தில் 08 சேவைகளும் மற்றும் கடலோரப் பாதையில் 34 சேவைகளும் மேற்கொள்ளத்  தேவையான நடவடிக்கை கள் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: