ஜனாதிபதி ஆணைக்குழுவில் 450 முறைப்பாடுகள்!

2015 ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் திகதி முதல் 2018 டிசம்பர் 31 ஆம் திகதிவரை அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் குறித்து ஆராய நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு 450 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
குறித்த முறைப்பாடுகளைப் பெற்றுக்கொள்வதற்கான கால எல்லை இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், அதனை மேலும் ஒரு வாரத்திற்கு நீடிப்பதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதுவரை 15 முறைப்பாடுகள், ஆரம்பக்கட்ட விசாரணைகளுக்காக விசேட காவல்துறை பிரிவினருக்கு கையளிக்கப்படடுள்ளதாவும் ஜனாதிபதி ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.
Related posts:
வலிகாமம் வடக்கில் மீளக் குடியமர அனுமதிக்கப்பட்ட பகுதியிலுள்ள நான்கு பாடசாலைகளில் புதிய வகுப்பறைக் கட...
அமெரிக்கர் உள்ளிட்ட மூவர் யாழ்ப்பாணத்தில் கைது!
மாணவர்களுக்கு டெப் கணினி : கல்வி துறையில் பாரிய வெற்றி - கல்வி அமைச்சர்!
|
|