ஜனாதிபதியின் புதிய செயலாளர் இன்று நியமனம்.

Tuesday, July 4th, 2017

கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்ணான்டோ, ஜனாதிபதியின் புதிய செயலாளராக இன்று உத்தியோக பூர்வமாக நியமிக்கப்படவுள்ளார்

ஜனாதிபதி செயலாளராக இருந்த பீ.பி அபயகோன் தனிப்பட்ட காரணங்களுக்காக கடந்த தினம் பதவி விலகினார் இந்த நிலையிலேயே ஜனாதிபதியின் புதிய செயலாளராக ஒஸ்டின் பெர்ணான்டோ நியமிக்கப்படுகிறார்

இதனிடையே, இன்றைய தினம் புதிய இராணுவ தளபதி ஒருவர் நியமிக்கப்படவுள்ளார் முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் கிரிஸாந்த டி சில்வா பாதுகாப்பு படைகளின் பிரதானியாக பதவி உயர்வு பெற்றார்

இந்த நிலையில், புதிய இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க நியமிக்கப்படுவார் என தெரிவிக்கப்படுகிறது

Related posts: