ஜனாதிபதியின் பிறந்த தினத்தினை முன்னிட்டு  யாழ். போதனா வைத்தியசாலையில் 63 நோயாளர்களுக்குக் கண் சத்திரசிகிச்சை!

Wednesday, September 7th, 2016

இலங்கை ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பிறந்த தினத்தினை முன்னிட்டு ஐனாதிபதி செயலகம் மற்றும் சுகாதார அமைச்சின்  ஏற்பாட்டில் ஆயிரம் கண்களின் விழிவெண்படலத்தினை அகற்றும் தேசிய நிகழ்ச்சித்திட்டம் யாழ். போதனா வைத்தியசாலையில் அண்மையில் இடம்பெற்றுள்ளது. இதன்படி, தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்குக் கண் பார்வைக் குறைபாடுள்ள 63 நோயாளர்களுக்குக் கண் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பாக யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதிப்பணிப்பாளர் ஸ்ரீ.பவானந்தராஜா கருத்துத் தெரிவிக்கையில்,

எமது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பிறந்த தினத்தினை முன்னிட்டு ஆயிரம் பேருக்குக் கண் புரை சத்திரசிகிச்சை மேற்கொள்ளும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் யாழ். போதனா வைத்தியசாலையில் 63 கண் நோயாளர்களுக்கு இலவசமாக ஜனாதிபதி செயலகத்தால் வழங்கப்பட்ட வில்லைகள் மற்றும் உபகரணங்களைக் கொண்டு  அவர்களுக்கான சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்றார்.

unnamed

unnamed (1)

Related posts:


வலிகாமம் தெற்கு கலாஜோதி சனசமூக நிலையத்திற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரால் உதவிப் பொருட்கள் வழங்...
பழிவாங்கல்களுக்கு இலக்கானவர்களுக்கு நியாயம் பெற்றுக் கொடுப்பேன் - பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ!
அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை - யாழ்ப்பாணம் – கிளிநொச்சி இடையே யாழ்.ராணி விசேட ரயில் சேவை இன்று காலைமுதல...