ஜனாதிபதியின் தீர்மானங்களை எவரும் சவாலுக்குட்படுத்த முடியாது – பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!

Monday, May 25th, 2020

தற்போதைய அரசை யாராலும் அசைக்கவும் முடியாது, கவிழ்க்கவும் முடியாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அத்துடன் தீர்மானிக்கப்பட்ட திகதியில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த முடியாது என்றால் பிறிதொரு திகதியில் தேர்தலை தேர்தல்கள் ஆணைக்குழு நடத்தியே தீரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் தீர்மானங்களை எவரும் சவாலுக்குட்படுத்த முடியாது எனவும், எதிரணியினர் உயர்நீதிமன்றத்தை நாடி எந்தப் பயனையும் பெறமாட்டார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் நாடாளுமன்றக் கலைப்பு மற்றும் தேர்தல் திகதி தொடர்பில் உயர்நீதிமன்றம் எந்தத் தீர்ப்பை வழங்கினாலும் எக்காரணம் கொண்டும் பழைய நாடாளுமன்றத்தை ஜனாதிபதி மீளவும் கூட்டமாட்டார் எனவும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்..

மேலும் எதிரணியினரின் பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் கொரோனா வைரஸை இல்லாதொழிக்கும் எமது பணி தொடர்கின்றது. இதில் முப்படையினரினதும் பொலிஸாரினதும் மருத்துவத்துறையினரினதும் சேவைகள் அளப்பரியவை என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முக்கியஸ்தர்களுடன் நடத்திய கலந்துரையிடலின்போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: