ஜனாதிபதியின் செயலாளர் பதவிக்கு ஒஸ்டின் பெர்ணாண்டோ நியமனம்!

Saturday, July 1st, 2017

வெற்றிடமாகியுள்ள ஜனாதிபதியின் செயலாளர் பதவிக்கு தாம் நியமிக்கப்பட உள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் செயலாளராக பணியாற்றிய பி.பீ.அபேகோன் நேற்று பதவி விலகினார். தனிப்பட்ட காரணங்களின் அடிப்படையில் தாம் பதவி விலகுவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்

இந்த நிலையில், ஜனாதிபதியின் புதிய செயலாளராக எதிர்வரும் 3 தினங்களுக்குள் தாம் நியமிக்கப்பட உள்ளதாக ஒஸ்டின் பெர்ணாண்டோ எமது செய்திச் சேவையிடம் தெரிவித்தார்.

Related posts: