ஜனாதிபதியின் இராஜினாமா கடிதம் இதுவரை கிடைக்கவில்லை – சபாநாயகர் தெரிவிப்பு!

Wednesday, July 13th, 2022

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று தமது பதவியிலிருந்து விலகுவதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவரதன அண்மையில் தெரிவித்திருந்தார்.

எனினும், ஜனாதிபதியின் பதவிவிலகல் தொடர்பான உத்தியோகபூர்வ கடிதம் இதுவரையில் தமக்கு கிடைக்கவில்லை சபாநாயகர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமது பதவியிலிருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விலகினால், எதிர்வரும் 15 ஆம் திகதி நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கு கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.

சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் கடந்த 11ஆம் திகதி இடம்பெற்ற விசேட கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டது.

இந்நிலையில் ஜனாதிபதி பதவி வலிகினால், எதிர்வரும் 19ஆம் திகதி அடுத்த ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்காக, நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே வேட்புமனு கோருவதற்கும், 20ஆம் திகதி வாக்கெடுப்பை நடத்துவதற்கும் குறித்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் திட்டமிடப்பட்டதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

இன்று முன்னிரவு 8 மணிமுதல் திங்கட்கிழமை அதிகாலை 5 மணிவரை நாடளாவிய ரீதியில் அமுலாகும் ஊரடங்கு !
அமெரிக்க - இலங்கை நட்புறவின் 75 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாட இலங்கை வருகின்றார் அமெரிக்க இராஜாங்க திண...
இலங்கையின் கடன் நிவாரணம் மற்றும் அதனை திருப்பிச் செலுத்தும் காலக்கெடுவை நீடிப்பது தொடர்பான உடன்பாட்ட...