ஜனவரிமுதல் வாகனங்களுக்கான காபன் வரி அறவிடப்படும்!

Friday, October 26th, 2018

மோட்டார் வாகனங்களுக்கான காபன் வரியினை எதிர்வரும் ஜனவரி முதல் அறவிடுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் இரான் விக்கிரமரத்ன நேற்று(25) பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

குறித்த வரியானது மின்சாரத்தினால் செயற்படும் வாகனங்களுக்கு விதியாகாது எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;

“நிதிச் சட்டத்திற்கு கீழ் 2018ம் ஆண்டுக்கான வரிச் சட்டங்கள் 06 இற்கான விதி முறைகள் உள்ளன. பங்கு பரிவர்த்தனை வரி நீக்கப்பட்டது. மோட்டார் கார்கள் இறக்குமதி செய்யும் போது அதிசொகுசு வாகனங்களுக்கு வரி ஒன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மாளிகைகளுக்கான வரி நீக்கப்படவுள்ளது. மோட்டார் வாகனங்களுக்கான காபன் வரியானது 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அறவிடப்படவுள்ளது” என தெரிவித்திருந்தார்.

Related posts:

மத்திய வங்கி உத்தியோகத்தர்களுக்கு ஜனாதிபதி கடும் எச்சரிக்கை - பணி நீக்குவதற்கும் தயங்கப் போவதில்லை எ...
வாக்காளர் பெயர் பட்டியலில் கைச்சாத்திடும் நடவடிக்கைகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதிக்குள் மே...
சிறையிலுள்ள உறவுகளைப்பார்க்க இன்றுமுதல் மீண்டும் அனுமதி - சிறைச்சாலைகள் திணைக்களம் நடவடிக்கை!