சொந்த வாகனங்களில் பயணிக்கும் போது முகக்கவசம் கட்டாயமில்லை – பொலிஸார் அறிவிப்பு!

பொதுப்போக்குவரத்தில் பயணிக்கும்போதே முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தனியார் தமது சொந்த வாகனங்களில் பயணிக்கும் போது கட்டாயமாக முகக் கவசங்களை அணிய வேண்டியதில்லை என சுகாதாரப் பிரிவினரும் பொலிஸாரும் அறிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில் இவ்வாறு முகக் கவசங்கள் அணியப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் தனியார் வாகனங்களில் பயணிக்கும் போது நபர்கள் கட்டாயமாக முகக் கவசங்களை அணிய வேண்டுமென்பதில்லை என சுகாதார சேவைப் பிரதிப் பணிப்பாளர் நாயகம் பபா பலிஹவடன தெரிவித்துள்ளார்.
குறிப்பாக கார்கள் மற்றும் வான்கள் உள்ளிட்ட சொந்த வாகனங்களில் பயணிக்கும் போது இவ்வாறு முகக் கவசங்களை அணிய வேண்டிய கட்டாயமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொலிஸாரும் இந்த விடயத்தை உறுதி செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. எவ்வாறெனினும் பொதுமக்கள் ரக்ஸிகள், முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட தனியார் வாகனங்களில் பயணிக்கும்போது முகக் கவசங்களை அணிய வேண்டியது கட்டாயம் என பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|