சேவையிலிருந்து நீக்கப்பட்ட 50 சொகுசு ரக பேருந்துகள் எதிர்வரும் 6 மாதங்களில், மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்பபடும் – இலங்கை போக்குவரத்து சபை தெரிவிப்பு!

Friday, October 13th, 2023

சேவையிலிருந்து நீக்கப்பட்ட 50 சொகுசு ரக பேருந்துகள் எதிர்வரும் 6 மாதங்களில், மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை  தெரிவித்துள்ளது.

பல்வேறு தொழிநுட்ப கோளாறுகள், உதிரிபாகங்களின் பற்றாக்குறை போன்ற பிரச்சினைகள் காரணமாக தற்போது சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள பேருந்துகள், கடுபெத்த (Kadubedda) அதிசொகுசு ரக சுற்றுலா போக்குவரத்து சேவை நிறுவனத்தில் தரிது வைக்கப்பட்டுள்ளது

இலங்கையில் இடம்பெற்ற பொதுநலவாய மாநாட்டின் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொள்வதற்காக அரசாங்கத்தினால், கொண்டுவரப்பட்ட 50 சொகுசு ரக பேருந்துகளே இவ்வாறு தரித்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பேருந்துகளால் நாளாந்தம் ஒரு இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான தேறிய இலாபத்தை ஈட்ட முடியும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

அத்துடன் குறித்த பேருந்துகளை விரைவாக திருத்தி மீண்டும் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வரப்படுகின்றதாவு தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

கடந்த வருட முதற்காலாண்டை விட இந்த வருடம் மழை குறைந்துள்ளது - வளிமண்டலவியல் திணைக்களப் பொறுப்பதிகாரி!
மலரும் தீபத்திருநாள் எமது மக்களுக்கான வாழ்வியல் விடிவை பெற்றுத்தரும் நாளாக அமைய வேண்டும் - முன்னாள் ...
மூன்று ஆண்டுகளுக்குள் அஸ்வெசும நிவாரணம் நிறுத்தப்படும் - அமைச்சர் அனுபா பாஸ்குவேல் தெரிவிப்பு!