செப்டெம்பரில் ஜனாதிபதி தேர்தல் – 2025 ஜனவரியில் நாடாளுமன்ற தேர்தல் – 2025மார்ச்சில் மாகாண சபை தேர்தல் – அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிப்பு!

Sunday, January 14th, 2024

ஜனாதிபதி தேர்தலை 2024 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்திலும், அதனை தொடர்ந்து பாராளுமன்ற தேர்தலை 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலும், மாகாண சபை தேர்தலை  மார்ச் மாதத்திலும் நடாத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்புகள் கூடிய விரைவில் வெளியிடப்பட உள்ளதுடன்  பரந்துபட்ட அரசியல் கூட்டணியில் கட்சி சார்பற்ற பொது வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை களமிரக்குவதற்கான தீர்மானம் ஐக்கிய தேசிய கட்சியின் நிறைவேற்றுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் நிறைவேற்றுக்குழு கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற போதே உத்தேச தேசிய தேர்தல்களுக்கான கால அட்டவணையை ஜனாதிபதி வெளிப்படுத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

000

Related posts: