இலங்கையில் இதுவரை 13 மாவட்டங்களில் கொரோனா பரவியுள்ளது – ஆபத்து தொடர்பில் சுதத் சமரவீர எச்சரிக்கை!

Thursday, October 22nd, 2020

தற்போது மினுவாங்கொடயிலிருந்து பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் 13 மாவட்டங்களுக்கு பரவத் தொடங்கியுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவின் தலைமை அதிகாரி வைத்தியர் சுதத் சமரவீர எச்சரித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தகவல் வெளியிட்டுள்ள அவர் –

தற்போதைய சூழ்நிலையில், மினுவாங்கொடயிலிருந்து பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் 13 மாவட்டங்களுக்கு பரவத் தொடங்கியுள்ளது. இது ஏனைய மாவட்டங்களுக்கும் பரவும் ஆபத்துள்ளது.

குருநாகல், புத்தளம், கேகாலை, கண்டி, காலி, அம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம், வவுனியா, அனுராதபுரம், பொலனறுவை உட்பட பல மாவட்டங்களில் இருந்தும் விசேடமாக கம்பஹாவிலிருந்தும் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பேலியகொட மீன் சந்தையில் மீன் விற்பவர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து மீன் விற்பவர்கள் ஊடாக கொரோனா வைரஸ் நாட்டின் பல பகுதிகளில் பரவும் ஆபத்துள்ளது.

பேலியகொட மீன் சந்தையிலிருந்து நாட்டின் பல பகுதிகளுக்கும் மீன்களை விற்பனை செய்துள்ளனர். இதன் காரணமாக தொற்றிற்குள்ளானவர்கள் இருக்கக்கூடும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Related posts: