செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் -இராணுவ தளபதி சந்திப்பு!

Wednesday, August 23rd, 2017

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவரான செல்வி கிளாரி மெய்ட்ரெட் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவை சந்தித்துள்ளார்.

இராணுவத் தலைமையகத்தில் நேற்றையதினம் இந்த சந்திப்பு இடம்பெற்றது.இந்த சந்திப்பின் போது வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் இராணுவத்தின் சேவை மற்றும் செஞ்சிலுவைச் சங்கத்தின் சேவைகள் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டது. இந்த சந்திப்பை நினைவுகூறும் வகையில் இருவருக்குமிடையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறப்பட்டது.இந்த கலந்துரையாடலில் புதியதாக நியமிக்கப்பட்ட செஞ்சிலுவைச் சங்கத்தின் உப தலைவரான திரு சகாரியா மைகாவும் கலந்து கொண்டார்