ஜனநாயக தமிழ்த் தேசிய முன்னணியின் புதிய அரசியல்தீர்வுக்கான  முன்மொழிவு வெளியீடு!

Monday, May 30th, 2016

புதிய அரசியல் தீர்வுக்கான ஆலோசனைகள் உள்ளடங்கிய அரசியல் வரைபை ஜனநாயக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இன்று வெளியிட்டுள்ளது.

குறித்த நிகழ்வு ஜனநாயக தமிழ்த் தேசிய முன்னணியின் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

இந்த வரைபு வெளியீட்டு நிகழ்வில் ஊடகங்களுக்குக் கருத்துவெளியிட்ட 11 தமிழ் அமைப்புகளின் தலைவர்கள் கருத்து தெரிவிக்கையில் வெளியிடப்பட்டுள்ள அரசியலமைப்பு வரைபானது ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கும், இராஜதந்திரிகளுக்கும் வழங்கத் தாம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்திருந்தனர்..

ஊடகங்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் – சமஷ்டி பற்றியோ ஒற்றையாட்சி பற்றியோ அர்த்தமற்ற வகையிலான விவாதங்களுக்குத் தாங்கள் முயற்சிக்கவில்லை என்றும், ஏற்கனவே எமது நாட்டில் அனைத்து மக்களும் ஏற்றுக் கொண்டிருக்கும் 13ஆவது சட்டத்திலுள்ள நல்ல அம்சங்களையும் இலங்கை சட்ட அமைப்பு முறையிலுள்ள நல்ல அம்சங்களை உள்ளடக்கிய எமது நாட்டிற்குப் பொருத்தமான சில பரிந்துரைகளையும் உள்ளடக்கியதாகவே தமது தீர்வுத் திட்டத்தைத் தயாரித்ததாக தெரிவித்திருந்தனர்.

மேலும் இணைந்த வடக்குக் கிழக்கில் முஸ்லிம் மக்களுக்கான சுயாதிக்கம் போன்ற விடயங்களையும் உள்ளடக்கியதாக அந்த அரசியல் வரைபு ஜனநாயக தமிழ்த் தேசிய முன்னணியினரால் இன்று வெளியிடப்பட்டது.

இந்நிகழ்வின் ஆரம்பத்தில் மூத்த பத்திரிகையாளரான சிவா சுப்ரமணியத்தின் மறைவை நினைவுகூர்ந்து அவருக்காக ஒருநிமிட மௌன அஞ்சலி மரியாதை செலுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

e09c8edc-a53a-4bf6-bc63-ced7d5889c4d

241490d1-741a-48e1-8e3f-db66ca4d92dd

Related posts: