சூளைமேட்டு வழக்கு எதிர்வரும் 24 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

Tuesday, March 15th, 2016
சூளைமேட்டுச் சம்பவம் தொடர்பான நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா மீதான வழக்கு விசாரணையை சென்னை 4–வது கூடுதல் செசன்  நீதிமன்றம்  வரும் 24ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.

கடந்த 5ஆம் திகதி இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தில் இருந்து வீடியோ கொன்பிரன்ஸ் மூலம் டக்ளஸ் தேவானந்தா சென்னை செசன்  நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.

இந்நிலையில் குறித்த வழக்கு நீதிபதி எம். சாந்தி முன்னிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பு சாட்சிகள் யாரும் ஆஜராகாததன் காரணமாக குறித்த வழக்கு எதிர்வரும் 24 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: