சுற்றுலா பயணிகளுக்கு தங்குமிட வசதிகளுக்கு ஏற்பாடு!

Friday, March 31st, 2017

சுற்றுலா பயணிகளுக்கு ரயில் நிலையங்களுக்கு அருகாமையில் தங்குமிட வசதிகளை அமைத்து கொடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கை புகையிரத திணைக்களத்தினால் கைவிடப்பட்டுள்ள புகையிரத நிலையங்களை புனரமைத்து, கொழும்பு, மஹய்யாவ, நானுஓயா, அம்பேவல, எல்ல மற்றும் தொடந்துவ ஆகிய புகையிரத நிலையங்களுக்கு அருகில் உள்ள இடங்களி;ல சுற்றுலா பயணிகளுக்காக தங்குமிட வசதிகளை அமைத்து கொடுப்பதன் மூலம் புகையிரத திணைக்களத்திற்கு மேலதிக இலாபத்தை ஈட்ட முடியும் .

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து இந்த வேலைத்திட்டத்தினை செயற்படுத்துவதற்கு போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Related posts: