சார்க் அமைப்பின் பொதுச்செயலாளருடன் ஜனாதிபதி சந்திப்பு

Saturday, April 23rd, 2016
தெற்காசிய நாடுகளில் வாழும் மக்களுக்கிடையிலான தொடர்பை மேலும் வலுவூட்டில் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சார்க் அமைப்பின் பொதுச்செயலாளர் அர்ஜூன் பீ.தாபாவிற்கு இடையில் நேற்று ஜனாதிபதி காரியாலயத்தில் பேச்சுவார்த்தை ஒன்று இடம் பெற்றது.
இச்சந்திப்பில் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக சார்க் நிதியத்தில் இருந்து 1.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை பெற்றுக்கொள்ள முடியும் என சார்க் பொதுச்செயலாளர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: