சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு

Monday, January 8th, 2018

இலங்கைக்கான சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.2017ம் ஆண்டில் சுற்றுலா பயணிகளின் வருகை மூன்று தசம் இரண்டு சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இக்காலப்பகுதியில் 21 இலட்சத்து 16 ஆயிரத்து 407 சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இலங்கையின் சுற்றுலா துறையின் சவால்மிக்க காலப்பகுதியாக கருதப்படும் 2017ம் ஆண்டில் இந்த அதிகரிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும் என்றும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

Related posts: