சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு – ஜூனில் மட்டும் 32 ஆயிரத்து 865 பேர் வருகை!

Saturday, July 9th, 2022

கடந்த மே மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜூன் மாதம் நாட்டுக்கு வந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 8.8 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த மே மாதம் நாட்டுக்கு 30,207 சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர்.இந்த எண்ணிக்கை ஜூன் மாதம் 32, 865ஆக அதிகரித்துள்ளது.

இதன்படி, முதல் அரையாண்டில் நாட்டை வந்தடைந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 4 இலட்சத்தை கடந்துள்ளது.கடந்த ஜூன் மாதம் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவில் இருந்து வந்துள்ளனர்.

இதற்கமைய இந்தியாவிலிருந்து 6,650 பேரும், பிரித்தானியாவில் இருந்து 3,199 பேரும், அவுஸ்திரேலியாவில் இருந்து 2,448 பேரும் நாட்டுக்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: