சுற்றுலாத் தலங்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ!

Sunday, August 23rd, 2020

குருநாகல் மற்றும் ஏனைய பகுதியில் உள்ள அனைத்து வரலாற்று சிறப்புமிக்க சுற்றுலாத் தலங்களை அபிவிருத்தி செய்வதற்காக அறிவுறுத்தல்களை சுற்றுலா அமைச்சருக்கு வழங்கவுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அத்துடன் சிறு மற்றும் பெரு போகம் ஆகிய இரு சந்தர்ப்பங்களிலும் வடமேல் மாகாணத்தில் 12,500 ஹெக்டேயர் விவசாய நிலங்களை வளப்படுத்தும் வடமேல் மாகாண கால்வாய் திட்டத்தை துரிதப்படுத்துமாறும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார்.

குருநாகல், மொரகொல்லாகம, சியம்பலன்கமுவவில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.

Related posts: