சுய விருப்பின் பேரில் இராஜினாமா செய்யும் கால அவகாசம் மீண்டும் நீடிப்பு!
Sunday, August 21st, 2016சுய விருப்பின் அடிப்படையில் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் இராஜினாமா செய்வதற்கான மற்றுமொரு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
ஓய்வு பெறுபவர்களுக்கு வழங்கப்படும் நட்டஈட்டுத் தொகை அதிகரிக்கப்பட்டதை அடுத்து இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமல் சிறிவர்தன குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய எதிர்வரும் 26 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். சுய விருப்பின் அடிப்படையில் ஓய்வுபெறுபவர்களுக்கான ஒரு மாதத்திற்கான கொடுப்பனவு வழங்கப்படுவதோடு நட்டஈடும் செலுத்தப்படும் எனவும் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் தெரிவித்துள்ளார். இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களுக்கு இந்த விடயம் தொடர்பில் ஏற்கனவே வழங்கப்பட்ட கால அவகாசத்திற்குள் 2900 பேர் இராஜினாமா கடிதங்களை வழங்கியிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Related posts:
|
|