சுபீட்ச யுகத்திற்கு இட்டுச் செல்ல சீரான பொருளாதார அடித்தளம் அவசியம் – பிரதமர்!

Wednesday, August 16th, 2017

நாட்டை சுபீட்ச யுகத்திற்கு இட்டுச் செல்ல சீரான பொருளாதார அடித்தளம் அவசியமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதற்காக திட்டமிட்ட அடிப்படையிலான குறுகிய கால, நீண்டகால நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென்று நேற்றையதினம் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நூல் வெளியிட்டு விழாவில் பிரதமர் குறிப்பிட்டார்.

சமகால உலக பொருளாதாரத்துடன் நெருக்கடிகளையும் தீவிரமடைந்துள்ளது. இவற்றுக்கு ஏற்ற வகையில் மீள் கட்டமைப்பு இடம்பெற வேண்டும். பொருத்தமான சமூக பொருளாதார அரசியல் கட்டமைப்பை விரைவாக உருவாக்க வேண்டும். கடந்த இரண்டரை ஆண்டுகளுக்குள் இரண்டு அமைச்சர்கள் விலகினார்கள். இது வளர்ச்சி கண்ட ஜனநாயகம் நிலவும் நாடுகளில் உள்ள போக்கென பிரதமர் மேலும் தெரிவித்தார்.

Related posts:


வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் வீட்டுப் பணிப்பெண்களின் ஆகக்குறைந்த வயதெல்லையில் திருத்தம்!
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதற்கட்டம் இன்று ஆரம்பம்!
நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 50 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று...