சுன்னாகத்தில் ரயில் மோதி வயோதிபப்பெண் பலி!

Monday, May 23rd, 2016

சுன்னாகம் பகுதியிலுள்ள பாதுகாப்பான ரயில் கடவையில் ரயில் மோதி வயோதிபப் பெண் உயிரிழந்துள்ளார்.

இன்று (23) இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் பலியான பெண் 70 வயது மதிக்கத்தக்கவர் என தெரிவிக்கப்படுகின்றது.

ரயில் வருவதற்காக கடவை மூடப்பட்டிருந்த போதும் , இந்த வயோதிப பெண், கடவையின் கீழாக குனிந்து ரயில் பாதையைக் கடக்க முற்பட்ட போதே கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கிச் சென்ற ரயில் மோதியுள்ளது.

உயிரிழந்தவர், இன்னமும் அடையாளங் காணப்படவில்லையெனவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சுன்னாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

download (1)

Related posts: