சுதந்திர தினத்தை முன்னிட்டு அமெரிக்க ஜனாதிபதி வாழ்த்து!

Sunday, February 4th, 2018

இலங்கையின்  70ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மனப்பூர்வமாக வாழ்த்து தெரிவிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதிக்கு விசேட வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

அந்த வாழ்த்துச்செய்தியில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது,

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தில் இலங்கை நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் நீதியான ஆட்சி என்பவற்றை சிறப்பாக முன்னெடுத்துவருகின்றது. இந்த சந்தர்ப்பத்தில் 70ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மனப்பூர்வமாக வாழ்த்து தெரிவிக்கின்றேன்.

தற்போதைய ஜனாதிபதியின் தலைமையில் இலங்கை நல்லிணக்கத்தினதும் சுபீட்சத்தினதும் நோக்கங்களை உறுதியாக அடைந்துகொள்ளும் என்றும் அமெரிக்கா ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts:

குளங்களைப் பார்வையிடச் செல்வோர் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி உயிராபத்தை தவிர்த்துக் கொள்ளவும் - ப...
ஏப்ரல் 21 தாக்குதல் ஆணைக்குழுவின் அறிக்கையை எவராலும் ஏற்றுக் கொள்ளவோ அல்லது நிராகரிக்கவோ முடியும் - ...
இந்திய பிரதமர் நரேந்திர மோடி - ஜனாதிபதி கோட்டப ராஜபக்ச இடையே அபிவிருத்தி உள்ளிட்ட பல முக்கிய விடயங்...