சுகாதார நடைமுறைகளை பின்பற்றாவிடின் நடவடிக்கை – பொலிஸ் திணைக்களம் எச்சரிக்கை!

Tuesday, July 14th, 2020

நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீண்டும் பின்பற்றுமாறு பொதுமக்களிடம் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சுகாதார வழிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தால் அறிவிக்கப்படும் வரை இந்த சுகாதார வழிமுறைகளை பின்பற்றுதல் அவசியம் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதற்கு முன்னர் பொதுமக்கள் வழங்கிய ஒத்துழைப்புகளை தொடர்ந்தும் எதிர்பார்ப்பதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

Related posts:

சீனித் தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்ய தேவையான டொலரை பெற்றுக் கொள்ள வசதிகளை ஏற்படுத்துமாறு இறக்குமதி...
சீன அரசாங்கம் தொடர்ந்தும் யாழ்ப்பாண மக்களுக்கு உதவிகளை வழங்கும் - இலங்கைக்கான சீனத் தூதுவர் தெரிவிப்...
திங்கள், செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய நாள்களில் காலை வேளைகளில் அலுவலகங்களில் தங்கியிருக்க வேண்...