சுகாதார அறிவுரைகளை பேணுவது நிறுவன பிரதானிகளின் பொறுப்பாகும் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்து!

Wednesday, July 15th, 2020

கொரோனா  தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள தற்போதைய சூழ்நிலையில் வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுவது நிறுவன பிரதானிகளின் பொறுப்பாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றை முழுமையாக கட்டுப்படுத்தும் வரை சமூக ரீதியாக வைரஸ் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. கந்தகாடு புனர்வாழ்வு நிலையம் அதற்கு ஒரு உதாரணமாகும். அதனால் சமுதாய ரீதியாக இலகுவாக செய்யக்கூடிய பரிசோதனைகளை தொடர்ந்து செய்ய வேண்டியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தள்ளார்.

அத்துடன் நாடு சுமூகமான நிலையை அடைந்திருந்தாலும், நோய்த் தொற்று பரவும் அபாயம் காணப்படுவதால் பாதுகாப்பு நடவடிக்கைகளை கைவிட கூடாது. புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள், பல்கலைக்கழகங்கள், பாடசாலைகள் போன்றவற்றில் உடல் வெப்பநிலையை பரிசோதித்தல் போன்ற இலகுவான பரிசோதனைகளை தினமும் முன்னெடுப்பதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

முகக் கவசம் அணிதல், கைகழுவுதல் மற்றும் சமூக இடைவெளியை பேணுதல் எந்த நேரமும் பின்பற்றப்பட வேண்டியவைகளாகும். காய்ச்சல், தொண்டைவலி போன்ற நோய் அறிகுறிகள் இருப்பின் அதுபற்றி புரிந்துகொண்டு சமூகத்தில் சேர்ந்து வாழாது தனித்திருந்து நோய்த் தொற்று ஒழிப்புக்கு பங்களிக்க முடியுமென்றும் ஜனாதிபதி தெரிவித்துள்மை குறிப்பிடத்தக்கது.

Related posts:


கிழக்குமாகாணத்தின் கல்வித்தரம் வீழ்ச்சிகண்டு வருகின்றது - கல்வியியலாளர்கள் சுட்டிக்காட்டு!
வெளிநாடுகளிலிருந்து அழைத்துவரப்படும் இலங்கையர்களால் இலங்கையின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளாந...
சட்ட வரைபில் உள்ள குழப்பங்களை நீக்கிகப்பட்டு விரைவில் மாகாண சபைத் தேர்தலை -துறைசார் தரப்பினருக்கு ஜன...